தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள உதவி பொறியாளர்(அமைப்பியல், மின்னியல், வேளாண் பொறியியல்) உள்ளிட்ட 45 பதவிகளுக்கான 461 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு(நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-க்கான அறிக்கை, தேர்வாணைய ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வியாழக்கிழமை(மே 20) டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
பணி மற்றும் காலியிடங்கள் குறித்த விவரங்கள்:
பணி: உதவி நிலத்தியலாளர்
காலியிடங்கள்: 19
துறைவாரியான காலியிடங்கள்:
i. நிலத்தியல் மற்றும் சுரங்கம் - 9
ii. வேளாண்மை - 2
iii. நீர்வளம் - 9
தகுதி: நிலவியல் துறையில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவிப் பொறியாளர்(வேளாண் பொறியியல்)
காலியிடங்கள்: 64
தகுதி: வேளாண்மை, வேளாண் பொறியியல், மெக்கானிக்கல், சிவில், ஆட்டோ மொபைல், உற்பத்திப் பொறியியல், தொழில்துறைப் பொறியியல், சிவில் மற்றும் கட்டமைப்புப் பொறியியல், மெக்கானிக்கல் மற்றும் உற்பத்திப் பொறியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் பி.இ, பி.டெக்., பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: வேளாண் அலுவலர்
காலியிடங்கள்: 11
தகுதி: வேளாண் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: மருந்து ஆய்வாளர்
காலியிடங்கள்: 9
தகுதி: மருந்தகம் அல்லது மருந்தியல் அறிவியல் அல்லது மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: தோட்டக்கலை அலுவலர்
காலியிடங்கள்: 17
தகுதி: தோட்டக்கலை பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவிப் பொறியாளர் (அமைப்பியல்)
காலியிடங்கள்: 140
துறைவாரியான காலியிடங்கள்:
i. தமிழ்நாடு மின்னணு கழகம் - 2
ii. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - 1
iii. நெடுஞ்சாலை - 38
iv. நீர்வளம் - 33
v. பொதுப்பணித்துறை - 14
vi. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - 50
vii. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் - 2
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவி இயக்குநர் (தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்)
காலியிடங்கள்: 3
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், டெக்ஸ்டைல்ஸ், தொழிலக, உற்பத்தி ஆகிய ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: கொதிகலன் இளநிலை உதவி இயக்குநர்
காலியிடங்கள்: 2
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: இளநிலை கட்டிட வடிவமைப்பாளர்
காலியிடங்கள்: 5
தகுதி: கட்டடிடக்கலை துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி பொறியாளர் - மின்னியல்
காலியிடங்கள்: 15
துறைவாரியான காலியிடங்கள்:
பொதுப்பணி - 13
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் - 2
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவி பொறியாளர் (மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்)
காலியிடங்கள்: 1
தகுதி: பொறியியல் துறையில் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது வேதியியல் பிரிவில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் எம்.டெக்; அல்லது பெட்ரோலியச் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதியியல் பிரிவில் எம்.டெக் அல்லது சுற்றுச்சூழல் மேலாண்மை பிரிவில் எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: சுற்றுச்சூழல் அறிவியலாளர் (மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்)
காலியிடங்கள்: 4
தகுதி: அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கட்டட வடிவமைப்பு உதவியாளர், திட்டமிடல் உதவியாளர்
காலியிடங்கள்: 3
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நகரத் திட்டமிடல் பிரிவில் முதுகலைப் பட்டம் அல்லது சிவில் அல்லது கட்டடக்கலையில் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவிப் பொறியாளர் (தொழிற்சாலை)
காலியிடங்கள்: 1
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்)
காலியிடங்கள்: 4
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், கணினிப் பொறியியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவி கணக்கு அலுவலர்
காலியிடங்கள்: 1
தகுதி: இந்தியப் பட்டயக் கணக்காளர்கள், இந்தியச் செலவுக் கணக்காளர்கள் முடித்திருக்க வேண்டும்.
பணி: தொல்லியல் துறை அலுவலர்
காலியிடங்கள்: 10
தகுதி: பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், தொல்லியல், வரலாறு மற்றும் தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், வரலாறு, தொல்லியல் மற்றும் கையெழுத்துச் சுவடியியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
பணி: ஆராய்ச்சி உதவியாளர்
காலியிடங்கள்: 2
தகுதி: பொருளியல், பொருளியல் அளவியல், புள்ளியியல், வணிக நிர்வாகம், கணிதம், சமூகப் பணி, சமூகவியல், மானிடவியல், வேளாண் பொருளியல் அல்லது பொது நிர்வாகம் ஆகிய ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை அறிவியல் அலுவலர்
காலியிடங்கள்: 6
தகுதி: தடயவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவி கண்காணிப்பாளர்
காலியிடங்கள்: 2
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குற்றவியல் அல்லது தடயவியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் அல்லது உளவியலில் அல்லது உளவியலை ஒரு பாடமாகக் கொண்ட தத்துவவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கணினி மேலாளர்
காலியிடங்கள்: 1
தகுதி: பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் அல்லது கணினி அறிவியல் மற்றும் பொறியியல் அல்லது கணினிப் பொறியியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் அல்லது மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் அல்லது மின் மற்றும் மின்னணுவியல் பொறியியலுடன் கூடிய தொழில்நுட்ப பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: மொழிபெயர்ப்பாளர்
காலியிடங்கள்: 2
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் முடித்திருக்க வேண்டும்.
பணி: நூலகர்
காலியிடங்கள்: 1
தகுதி: நூலக அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பணி: புள்ளியியல் உதவியாளர்
காலியிடங்கள்: 1
தகுதி: கணிதம் அல்லது புள்ளியியல் ஆகிய ஏதாவதொன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: துணை மேலாளர் (பால் பண்ணை)
காலியிடங்கள்: 2
தகுதி: ஐடிடி, என்டிடி பட்டம் அல்லது பால் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது உணவுத் தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், உணவுப் பதப்படுத்துதல் துறையில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவிப் பொறியாளர் (இயந்திரவியல்)
காலியிடங்கள்: 4
துறைவாரியான காலியிடங்கள்:
i. தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் - 3
ii. தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் - 1
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பிஇ முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவி தொல்லியல் துறை அலுவலர்
காலியிடங்கள்: 10
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொல்லியல், கல்வெட்டியல், மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியலியல் ஆகிய ஏதாவொது துறையில் முதுகலைப் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி சுற்றுலா அலுவலர்
காலியிடங்கள்: 4
தகுதி: பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் பட்டம் அல்லது சுற்றுலாத் துறையில் பட்டயத்துடன் கூடிய ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி புள்ளியியல் புலனாய்வு அலுவலர்
காலியிடங்கள்: 13
தகுதி: புள்ளியியல் அல்லது கணிதம் அல்லது பயன்பாட்டுப் பொருளாதாரம் அல்லது பொருளாதாரம் ஆகிய ஏதாவொது துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: வட்டார சுகாதார புள்ளியியலாளர்
காலியிடங்கள்: 62
தகுதி: புள்ளியியல் அல்லது கணிதம் அல்லது பொருளாதாரம் ஆகிய ஏதாவொது துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை புகைப்படக்காரர்
காலியிடங்கள்: 23
தகுதி: விசுவல் கம்யூனிகேசன் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
பணி: உதவி நூலகர்
காலியிடங்கள்: 5
தகுதி: நூலகவியலில் அல்லது நூலக மற்றும் தகவல் அறிவியலில் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி மேலாளர் சேமிப்பு கிடங்கு
காலியிடங்கள்: 1
தகுதி: விவாசயத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: இளநிலை வேதியியலாளர்
காலியிடங்கள்: 3
தகுதி: வேதியியல் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவிப் பொது மேலாளர்
காலியிடங்கள்: 10
தகுதி: இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2026 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் பிரிவினர் 42 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக உள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு இல்லாத பணியிடங்கள் என்பதால், எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம்: எழுத்துத் தேர்வு ரூ.100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, பி.சி.எம் மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் விண்ணப்ப, தேர்வுக் கட்டணத்தை நெட் பேங்கிங் அல்லது வங்கி அட்டைகள் மூலம் செலுத்துவதை தவிரித்து, கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ மூலமாக செலுத்தலாம்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிப்பது எப்படி? தேர்வர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் தங்களது சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை தேர்வாணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தேர்வர்கள் தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் கொள்ள வேண்டும்.
இந்த தேர்விற்கான பாடத்திடங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
கணினிவழித் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.5.2026 முதல் 25.6.2026
தேர்வர்களின் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

மிஸ்பண்ணிடாதீங்க... ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

மெட்ரோ ரயில்வேயில் உதவி மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?








