மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் நாணயம் உற்பத்திக் கழகத்தில் காலியாகவுள்ள சூப்பர்வைசர், டெக்னீஷியன் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்களை பார்ப்போம்...
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். CNPN/HR/Rect/01/2026
பணி: Supervisor(Information Technology)
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.27,600 - ரூ.95,910
தகுதி: Information Technology,Computer Science பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Secretarial Assistant
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.23,910 - ரூ.85,570
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவு, நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் சுருக்கெழுத்தில் எழுதி அதனை தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Office Assistant
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.21,540 - 77,160
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி அறிவு, நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 30 வார்த்தைகள் இந்தியிலும் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Junior Technician
பிரிவு: Control
காலியிடங்கள்: 157
பிரிவு: Printing
காலியிடங்கள்: 34
பிரிவு: Fitter
காலியிடங்கள்: 15
பிரிவு: Electrical
காலியிடங்கள்: 6
பிரிவு: Machinist
காலியிடங்கள்: 3
பிரிவு: Electronics
காலியிடங்கள்: 10
வயது வரம்பு: மேற்கண்ட பணிகளுக்கு 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ 18,780 - ரூ.67,390
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Machinist, Electrical, Fitter, Electronics,Printing டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி ஆன்லைன் தேர்வு, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஒபிசி மற்றும் இடபுள்எஸ் பிரிவினர்களுக்கு ரூ.1,000. எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://cnpnashik.spmcil.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.5.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applicants may apply, after carefully going through all the instructions given in this advertisement and should ensure that they must fulfill all eligibility criteria...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செயற்கை உறுப்புகள் உற்பத்தி தொழிற்சாலையில் வேலை: டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

பொதுத்துறை நிறுவனத்தில் கணக்காளர், உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

அணுசக்திக் கழகத்தில் பாராமெடிக்கல் பணிகள்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பொதுத்துறை நிறுவன மருத்துவமனையில் பாராமெடிக்கல் பணிகள்: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு


