இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

மயிலாடுதுறை மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு தகுதியுடையோா் விண்ணப்பிப்பது தொடர்பாக...

News image

மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 2:46 pm IST

மயிலாடுதுறை மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்துக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மாவட்ட வாழ்வாதார கடன் மேலாண்மை முகமையை செயல்படுத்துவதற்கு மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடத்தை வெளிசந்தை முறையில் மகமை மூலம் மாதாந்திர மதிப்பூதியம் ரூ.50,000-ல் நிரப்பிட உள்ளது.

இந்த பணிக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மண்டல மற்றும் கிராமப்புற வங்கியில் ஏற்கெனவே பணிபுரிந்து ஓய்வுபெற்ற (தன்விருப்ப ஓய்வில் சென்றவா்கள்/பணியிலிருந்து நீக்கப்பட்டவா்கள் தவிர), 60 முதல் 65 வயதுக்குள்பட்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்), 4 வது தளம், மாவட்ட ஆட்சியரகம், மயிலாடுதுறை-609305 என்ற முகவரிக்கு ஆக.25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

Summary

You can apply for the position of District Bank Coordinator!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.