பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஐ.ஓ.பி.யில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (ஐ.ஓ.பி.)-ல் 250 உள்ளூர் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து...

IOB RECRUITMENT OF LOCAL BANK OFFICER 2026-27

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவங்கி - இந்தியன் ஓவர்சீஸ்

Published On :

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (ஐ.ஓ.பி.)-ல் 250 உள்ளூர் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விவரம் வருமாறு:

பணி: உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer)

காலியிடங்கள்: 250 (தமிழ்நாடு -100)

பணியிடங்கள்: தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், குஜராத்

சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேசி, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 1.8.2026 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழித்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்த விவரம் அடங்கிய நுழைவுச்சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திண்டுக்கல், சேலம், கோவை, வேலூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், ராமநாதபுரம்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.175. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iob.bank.in/en/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Indian Overseas Bank invites online applications for recruitment against 250 Vacancies for Local Bank Officers in JMGS - I. The selected candidate shall be posted in the applied state only.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.