உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மத்திய அரசில் உதவி செயல் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

மத்திய அரசு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவி நிர்வாகப் பொறியாளர் (சிவில்), உதவி இயக்குநர் போன்ற பல்வேறு பணியிடங்கள் குறித்து...

UPSC Recruitment 2026

யுபிஎஸ்சி - கோப்புப்படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 8:43 am IST

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டிருந்த மத்திய அரசு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவி நிர்வாகப் பொறியாளர் (சிவில்), உதவி இயக்குநர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஆக 28) கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காவர்கள் விரைந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 10/2026

பணி: Assistant Executive Engineer

பிரிவு: Civil

காலியிடம்: 1

பிரிவு: Electronics

காலியிடங்கள்: 9

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Director (Engineering)

காலியிடம்: 1

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Superitendent Translation (Hindi

காலியிடம்: 1

தகுதி: சட்டப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் இளநிலைப் படிப்பில் இந்தியை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Research Officer

காலியிடங்கள்: 11

தகுதி: புவியியல், புவியியல் அறிவியல், பயன்பாட்டுப் புவியியல், புவித்தகவலியல், புவிசார் தகவல் அமைப்பு, தொலை உணர்வு, புவிசார் தரவியல், புவிசார் தொழில்நுட்பம் ஆகிய பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Horticulture Development Officer

காலியிடங்கள்: 4

தகுதி: தோட்டக்கலை அறிவியல், விவசாயம் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Soil Conservation Assistant

காலியிடங்கள்: 7

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயம், தோட்டக்கலை பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.8.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

A total of 34 vacancies are open across seven Group “A” and Group “B” gazetted posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.