‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

தேசிய மனநலம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு பணிகள்

தேசிய மனநலம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள குரூப் 'பி' மற்றும் 'சி' பணிகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

News image

தேசிய மனநலம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு பல்வேறு பணிகள் - கோப்புப்படம்

Updated On :4 ஜூலை 2026, 9:07 am IST

தேசிய மனநலம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள குரூப் 'பி' மற்றும் 'சி' பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: NIMH/RECT/ADVT-1/B&C/2026-27

பணி: Neuroanaesthesia Technologist

காலியிடம் :1

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: Anaesthesia Technology பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Accountant

காலியிடம்:1

சம்பளம்: மாதம் ரூ.35,400

தகுதி: வணிகவியல் துறையில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் Computer Application,Tally Accounting, Software, VAT பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Junior Secretarial Assistant

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ. 19,900

தகுதி : ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 6 மாத கணினி பயிற்சியும், கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள், இந்தி 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: குரூப் 'பி' பணிகளுக்கு பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1,180. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.885. குரூப் 'சி' பணிகளுக்கு பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.885. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.590. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nimhans.ac.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, செய்து, அதை தெளிவாக பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director -NIMHANS, Post --307-No:-2900, Hosur Road, Bengaluru -560029

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 7.7.2026

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

NIMHANS invites application for the following vacant post through offline mode from india nationals residing in india and abroad...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.