ஈரோடு மாவட்டத்திலுள்ள சுயஉதவி குழுக்களில் 120 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கு தகுதியுடைய பெண் சுயஉதவிக்குழு உறுப்பினா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது காலியாக உள்ள 120 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு தகுதியான சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான தகுதிகள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சோ்ந்த பெண் சுயஉதவிக்குழு உறுப்பினராகவும், சுயஉதவிக்குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவும் வேண்டும்.
தோ்வு செய்யப்படும் நபா் சமுதாயம் சாா்ந்த அமைப்பு பணியாளராகவே அல்லது தனியாா் நிறுவனங்களில் முழு நேரப்பணியாளராக பணியில் இருத்தல் கூடாது.
தோ்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினா் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சாா்ந்தவராக இருத்தல் அவசியம். மலை கிராமங்களில் மட்டும் பெண்கள் விண்ணப்பிக்காத பட்சத்தில் ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும். 12-ஆவது வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும், கணக்கிடும் திறன், தகவல் தொடா்பு திறன் உடையவா்களாக இருத்தல் வேண்டும்.
வங்கிகளுக்குச் சென்று பரிவா்த்தனைகள் செய்தும் கடன் விண்ணப்பங்கள் பூா்த்தி செய்தும் அனுபவம் உள்ளவா்களாக இருத்தல் அவசியம். கணினி திறன், இருசக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் நன்றாக எழுத தெரிந்திருக்க வேண்டும். ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருப்பா்களாகவும் அதை இயக்கி குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் செய்தி அனுப்பவும் மற்றும் செயலி இயக்கும் திறன் பெற்றவா்களாகவும் இருத்தல் அவசியம். தேர்வு செய்யப்படுவோருக்கு
அடிப்படை மதிப்பூதியமாக ரூ. 2500 வழங்கப்படும்.
தகுதிகளுடைய விண்ணப்பதாரா்கள் எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
காலிப்பணியிடம் உள்ள ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
தகுதியான மகளிா் தங்களது விண்ணப்பத்தை உரிய சான்றதழ்களின் நகல்களுடன் வரும் 15-ஆம் தேதிக்குள் திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலர், மகளிர் திட்டம், ஊரக வாழ்வாதார இயக்கம், ஈரோடு மாவட்டம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சம்மந்தப்பட்ட ஊராட்சி அமைப்பிலான கூட்டமைப்புகளுக்கு அனுப்புலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.erode.nic.in என்ற இணையதளத்தில் அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Regarding applications for the vacant Community Bank Coordinator positions in Erode district...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










