இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பான 'இந்திய தேசிய கடல்சார் தகவல் தொடர்பு மையம்,' கடல்சார் துறைக்கான அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் கடல்சார் கண்காணிப்பு, கடல்சார் மாதிரியாக்கம் மற்றும் சுனாமி முன்னறிவிப்பு உள்ளிட்ட கடல்சார் தகவல் மற்றும் ஆலோசனைச் சேவைகள் ஆகிய துறைகளில், சிறப்பு கவனம் சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்நிறுவனத்தில், தற்போது நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். : INCOIS/RMT/01/2026
பணி: Scientific Assistant
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.35,400 - ரூ. 1,12,400
தகுதி: கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், வேதியியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
பணி: Scientist 'C'
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.67,700 - ரூ. 2,08,700
தகுதி: மத்திய, மாநில அரசு துறையில் அலுவலராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: பணி எண் 1-க்கு https://vacancies.incois.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மே. 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி எண் 2-க்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்பும் தபால் கவரின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
The Director, Indian National Centre for Ocean, Information Services (INCOIS) Ministry of Earth Sciences, Govt. of India, Pragathi Nagar, Nizampet Post, Hyderabad - 500 090.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 18.5.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
INCOIS invites applications from eligible Indian Nationals for selection in engagement on regular mode in various projects on Direct Recruitment.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தி மொழிபெயர்ப்பாளர் பணிக்கான தேர்வு: எஸ்எஸ்சி அறிவிப்பு!

கலாஷேத்ரா நாட்டியப் பள்ளியில் ஆசிரியர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.?

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் டிரெய்னி பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


