தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வழக்கு பணியாளர்
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் பிளஸ் 2 முடித்திருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
வயதுவரம்பு: 42- க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் தபால் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tenkasi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 14, செவன்த்டே பள்ளி அருகில், தென்காசி - 627 811.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 21.5.2026
Summary
Applications are invited for the post of Case Worker for contract Basis in the Tenkasi Child Helpline...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் 21 ஆயிரம் மாடுகளுக்கு உரிமம் பெறாதவா்களுக்கு அபராதம்: கால்நடை பராமரிப்பு பிரிவு அலுவலா் எச்சரிக்கை
விண்ணப்பித்துவிட்டீர்களா..?பொதுத்துறை வங்கியில் வேலை!

ரூபாய் நோட்டு அச்சகம்-நாணயம் உற்பத்திக் கழகத்தில் வேலை வேண்டுமா?

கடல்சார் தகவல்தொடர்பு மையத்தில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிகள்!
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |




