ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... விமானப் படையில் கிளார்க், தட்டச்சர், ஓட்டுநர் பணி!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள குரூப் 'சி' பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து....

News image

விமானப் படையில் கிளார்க், தட்டச்சர், ஓட்டுநர் பணி! - கோப்புப்படம்

Updated On :29 மே 2026, 8:31 am IST

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள குரூப் 'சி' பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆன்லைன் மகு தகுதியானவர்கள்

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01/2026

பணி: Civilian Mechanical Transport Driver(Ordinary Grade)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கனரக வாகன ஓட்டுநர் மற்றும் இரண்டு ஆண்டுகள் பணி அனு பவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lower Division Clerk

தகுதி : +2 தேர்ச்சியுடன் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Hindi Typist

கல்வித்தகுதி : +2 தேர்ச்சியுடன் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வருடங்களும் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் உடற்தகுதி, தொழிற்திறன் தகுதி மற்றும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, ரிசனிங்க், ஆங்கில மொழி போன்ற பிரிவு களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

எழுத்துத்தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண்கள் விவபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளவும். எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianairforce.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்த நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அல்லது கூகுள் இணையதளத்தில் IAF CBC 10801/11/0009/2627 என தட்டச்சு செய்தும் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.5.2026

Summary

Indian Air Force Recruitment 2026 for Civilian Mechanical Transport Driver,Lower Division Clerk and Hindi Typist Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.