மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சாஸ்திர சீமா பல் துணை ராணுவப்படையில் காலியாக உள்ள 404 காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து வரும் ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதன் விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 541 / RC/SSB/CT(GD)/SO-2025 / 2026
பணி: Constable General Duty (Under Sports Quota 2026)
காலியிடங்கள்: 404
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
வயதுவரம்பு: 7.6.2026 தேதியின்படி 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டுத் தகுதிகள்: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் ஜூனியர் அல்லது சீனியர் பிரிவு போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3-ஆவது இடமாவது வென்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்மந்தப்பட்ட விளையாட்டில் விண்ணப்பதாரரின் சாதனைகள், உடற்தகுதி, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப் படுவர்.
ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும் இரும் எஸ்டி பிரிவினர்களுக்கு 2.5 செ.மீ. சலுகை தரப்படும். மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) சாதாரண நிலையில் 80 செ.மீ. அகலமும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. அகலமும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.ssb.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான வேண்டிய கடைசி நாள்: 7.6.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
SSB Recruitment 2026 for 404 Constable (GD) Under Sports Quota Posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











