ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க...

வட்டார இயக்க மேலாண்மை அலகில் கிராமப்புற பகுதிகளில் காலியாகவுள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் தற்காலிகப் பணியிடங்கள் குறித்து...

News image

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணி - கோப்புப்படம்

Updated On :29 மே 2026, 1:45 pm IST

வட்டார இயக்க மேலாண்மை அலகில் கிராமப்புற பகுதிகளில் காலியாகவுள்ள சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் தற்காலிகப் பணியிடத்துக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் கிராமப்புற பகுதிகளில் காலியாகவுள்ள 86 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் தற்காலிகப் பணியிடத்துக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போா் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் நன்றாக எழுதப் படிக்கவும், கணக்கிடும் திறன் உடையவா்களாகவும் இருக்க வேண்டும்.

மலைப் பகுதிகளில் வசிப்போா் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றால் போதும். விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சாா்ந்த பெண் சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்க வேண்டும். சுய உதவிக் குழு ஊக்குநராக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.

இந்தப் பணிக்கு தோ்வு செய்யப்படுவோா் சமுதாயம் சாா்ந்த அமைப்பு பணியாளராகவோ அல்லது தனியாா் நிறுவனங்களில் முழு நேரப் பணியாளராக இருக்கக் கூடாது. வாராக்கடன் உள்ள குழுவின் உறுப்பினராகவும் இருக்க கூடாது.

தோ்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினா் பணிபுரியும் ஊராட்சியை (அல்லது ஊராட்சிகளை) சோ்ந்தவராக இருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பதாரா் தனது பெயா், பிறந்த தேதி, வயது, பாலினம், கல்வித் தகுதி, வசிப்பிட முகவரி, கைப்பேசி எண் ஆகிய விவரங்களை விண்ணப்பக் கடிதத்தில் தெளிவாக பிழைகள் ஏதுமின்றி குறிப்பிட்டிருக்க வேண்டும்.

12 -ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கான சான்று, வயது சான்று, முகவரிக்கான சான்று, இரண்டு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் ஆகியவை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (மே 29) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பங்களை இணை இயக்குநா், திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி, ஊராட்சி கட்டடம், மாவட்ட ஆட்சியரக வளாகம், சிவகங்கை 630 561 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Today is the last day to apply for the position of Community Bank Coordinator...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.