சிஜேபி தலைவர்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ்!எப்ஸ்டீனுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி! புயலைக் கிளப்பும் புதிய படங்கள்!முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு! ‘டார்க் வெப்’பில் வெளியீடு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை

ராணுவத்தில் பல் மருத்துவர் பணி: அக்.22-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

ராணுவத்தின் பல் மருத்துவப் பிரிவில் பல் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிப்பது குறித்து...

Short Service Commission in the Army Dental Corps 2026.

ராணுவத்தில் பல் மருத்துவர் பணி - படம்: ARMED FORCES MEDICAL SERVICES

Updated On :

ராணுவத்தின் பல் மருத்துவப் பிரிவில் (Army DentalCorps) Short Service Commission Officer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான இருபாலர்களிடம் இருந்து அக்.22-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

பணி: Short Service Commission Officer (Army Dental Corps)

காலியிடங்கள்: 37

சம்பளம்: மாதம் ரூ.61,300 - 1,20,900

வயதுவரம்பு: 31.12.2026 தேதியின்படி 45-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இந்திய பல் மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரி, பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் பிடிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்டிஎஸ் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்டிஎஸ் நீட்-2026 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு கட்டாய சுழற்சிப் பயிற்சியை 30 ஜூன் 2026-க்குள் முடித்திருக்க வேண்டும் மற்றும் மாநில பல் மருத்துவக் கவுன்சில் நிரந்தர பல் மருத்துவப் பதிவுச் சான்றிதழை, குறைந்தபட்சம் 31 டிசம்பர் 2026 வரை செல்லுபடியாகும் வகையில் வைத்திருக்க வேண்டும்.

உடற்தகுதித் தேர்வு:

ஆண்கள்: உயரம் 157 செ.மீஇருக்க வேண்டும் (எஸ்டி -152 செ.மீ) உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.

பெண்கள்: உயரம் குறைந்தது 152 செ.மீ. இருக்க வேண்டும் (எஸ்டி - 147 செ.மீ). உயரத்திற்கேற்ற எடை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நீட்(எம்டிஎஸ்) 2026 நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் உடற்தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.join.afms.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

தேர்வு செய்யப் படும் முறை: தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Online applications are invited from Indian citizens, both male and female

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.