ரூ. 100 கோடி மோசடி! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள்! தவெகவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!போக்சோ வீரமணிக்கு எதிரான முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடிஅமித் ஷா குறித்து அவதூறு! ராகுலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!போக்சோ வீரமணி உள்ளிட்ட 4 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு!ராகுல் காந்தி பாதுகாப்பு வாகனங்கள் விபத்து! 5 கார்கள், ஆம்புலன்ஸ் மோதல்!நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரம்: கே.என். நேரு மனு தள்ளுபடி

உளவியல் பட்டதாரிகளுக்கு இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலை

இந்தோ- திபெத்திய எல்லைக் காவல் படையில் நிரப்பப்பட உள்ள தலைமைக் காவலர் காலிப்பணியிடங்கள் குறித்து....

ITBP RECRUITMENT FOR THE POST OF HEAD CONSTABLE

இந்தோ-திபெத் எல்லைப் படையில் தலைமைக் காவலர் பணி - கோப்புப்படம்

Updated On :

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தோ- திபெத்திய எல்லைக் காவல் படை(ஐடிபிபி) பிரிவில் காலியாக உள்ள தலைமைக் காவலர் (கல்வி-மன அழுத்த ஆலோசகர்) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து அக்.27-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பார்ப்போம்...

பணி: Head Constable (Education and Counsellor)

காலியிடங்கள்: 16(ஆண்கள்-14, பெண்கள்-2)

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

வயது வரம்பு: 27.10.2026 தேதியின்படி 20 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: உளவியல் பாடத்தை முக்கிய பாடமாகக் கொண்டு இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பட்டப் படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி: ஆண்கள் 1.6 கி.மீ. தூரத்தை 7.30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 4.45 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். மேலும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

உடற்தகுதி: ஆண்கள் 170 செ.மீ. உயரமும் (எஸ்டி- 162.5 செ.மீ), பெண்கள் 157 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும் (எஸ்டி - 155 செ.மீ). மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) சாதாரண நிலையில் 80 செ.மீ.அகலமும், 5 செ.மீ. விரிவடையும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐடிபிபி ஆல் நடத்தப்படும் உடற்திறன் தேர்வில் வெற்றி பெறவேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் உடற்தகுதி, உடற்திறன் தகுதி, மருத்துவத் தகுதி மற்றும் ஐடிபிபி ஆல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

மேற்கண்ட தேர்வு களுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். அதை பதிவிறக்கம் செய்து தேர்வில் கலந்து கொள்ளவும். நேர் முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 மட்டும். பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் கட்டணம் செலுத்தவும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27.10.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ITBP RECRUITMENT FOR THE POST OF HEAD CONSTABLE

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.