சொதப்பிய டிராவிஸ் ஹெட், லபுஷேன்..! 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸி.!
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட்டின் நான்காம் நாள் குறித்து...

லபுஷேன் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தென்னாப்பிரிக்க வீரர் - படம்: ஏபி
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட்டின் நான்காம் நாளின் தொடக்கமே விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இன்று மட்டுமே 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
நேற்றைய முடிவில் ஆஸி. அணி 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், இன்றைய தொடக்கமும் மோசமாக அமைந்துள்ளது.
நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய ஸ்கட போலண்ட் இன்றைய முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன் தலா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து சொதப்பினார்கள்.
தற்போது, ஸ்டீவ் ஸ்மித் - மாத்திவ் ரென்ஷா விளையாடி வருகிறார்கள். தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 2, ககிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்க்யா தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.
தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 425/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஆஸி. 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, 377 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.
முதல் டெஸ்ட்டில் வென்ற ஆஸி. தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட்டில் தெ.ஆ. வெல்லும் முனைப்பு காட்டி வருகிறது.
Summary
Travis Head, Labuschagne are out of the game! Aussies are struggling after losing 4 wickets!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


