
விண்ணப்பித்துவிட்டீர்களா..? எஸ்பிஐ வங்கியில் நிதி அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
எஸ்பிஐ வங்கியில் நிதி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

பாரத ஸ்டேட் வங்கி - கோப்புப்படம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 'ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர்' பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.19-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: Notification No:CRPD/SCO/2026-27/15
பணி: Trade Finance Officer - IBG Grade JMGS.I
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ 48,480 - 85,920
வயது வரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Trade Finance Officer - IBG Grade MMGS.II
காலியிடங்கள்: 21
சம்பளம்: மாதம் ரூ 64,820 - 93,960
வயது வரம்பு: 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் வர்த்தக நிதியியல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: http://sbi.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.9.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
State Bank of India invites online applications from eligible Indian citizens for recruitment to the Specialist Cadre Officers Post on Regular Basis.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








