வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... 4,500 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! 

மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 4,500 இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்டரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெ
 வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... 4,500 மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! 
Published on
Updated on
1 min read


மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 4,500 இளநிலை செயலக உதவியாளர், டேட்டா என்டரி ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 2023 ஜனவரி 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் இதர விவரங்கள்: 

மொத்த காலியிடங்கள்: 4,500

பணி: Lower Division Clerk (LDC)
பணி: Junior Secretariat Assistant (JSA)
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

பணி: Data Entry Operator (DEO)
பணி: Data Entry Operator, Grade ‘A’
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.1.2022 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.1.1995-க்கு முன்பாகவோ, 1.1.2004 தேதிக்கு பின்னரோ பிறந்திருக்கக் கூடாது.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களிலும், புதுச்சேரியிலும் நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 4.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com