விண்ணப்பிக்கலாம் வாங்க... ரூ.50,000 சம்பளத்தில் வேலூர் சிறையில் வேலை!
வேலூர் மத்திய சிறை, சிறைக் காவலர் பயிற்சிப் பள்ளியில் முடிதிருத்துநர், இரவுக் காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், வேலூர் மத்திய சிறையில் காலியாக உள்ள ஒரு முடித்திருத்துநர், ஒரு இரவுக் காவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செயல்முறை தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிப்போர் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.15,700 - 50,000 வரை வழங்கப்படும்.
எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் 18 முதல் 37 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, பிசி(எம்) பிரிவினர் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தகுதியானோர் தங்களது கல்வி, சாதிச் சான்று, வயதுவரம்புச் சான்று, வேலைவாய்ப்பு அட்டை, முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்களுடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ரூ.30க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட உறை ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை, வேலூர் என்ற முகவரிக்கு அஞ்சலில் வரும் 20 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
Related Article
இந்திய அஞ்சல் துறையில் 60 ஆயிரம் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு?
விண்ணப்பிக்கலாம் வாங்க... ரூ.1,12,800 சம்பளத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை!
ரூ.50,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு: உடனே விண்ணப்பிக்கவும்!
ரூ.2,05,700 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பித்துவிட்டீர்களா..? கல்விப் பணிகளில் நிதியாளா் தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் 10 கடைசி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

