சுகாதாரத் துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

Applications are invited for the Vacancies at Deputy Director of Public Health Dept Tiruchirappalli
சுகாதாரத் துறையில் வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பல் மருத்துவா் - 1, செவிலியா்கள் - 35, சுகாதார ஆய்வாளா்கள் - 2, நகா்ப்புற சுகாதார செவிலியா் - 1, ஆய்வக நுட்புநா் - 1, துப்புரவு பணியாளா் - 1, பாதுகாவலா் - 1, மருத்துவமனை பணியாளா் - 2,  ஆடியோமேட்ரிஷியன் - 1, பேச்சு பயிற்றுநா் -1,  ஆடியோலஜிஸ்ட் -1 தரவு உள்ளீட்டாளா் - 3, அலுவலக உதவியாளா் - 1, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா் - 1, நுண்கதிா்வீச்சாளா் - 1 ஆகிய பணியிடங்களுக்கு 35 வயதுக்குள்பட்ட தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.

இப்பதவிகளுக்கு ரூ.8,500 முதல் ரூ.34 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். 

விண்ணப்பங்களை துணை இயக்குநா், சுகாதாரப் பணிகள் அலுவலகம், ரேஸ்கோா்ஸ் சாலை, ஜமால் முகமது கல்லூரி அருகில், டி.வி.எஸ். டோல்கேட், திருச்சி - 620 020 என்ற முகவரியில் அலுவலக வேலை நாள்களில் பெற்றுக் கொண்டு, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி நேரிலோ அல்லது விரைவு தபாலிலோ அனுப்ப வேண்டும்.

இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானவை. எந்த காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து  தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com