ஆதார் அலுவலகத்தில் வேலை வேண்டுமா? முழு விவரம்!

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (ஆதார்) துணை இயக்குநர், டெக்னிக்கல் அதிகாரி, உதவி டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதார் அலுவலகத்தில் வேலை வேண்டுமா? முழு விவரம்!
Published on
Updated on
1 min read


இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (ஆதார்) துணை இயக்குநர், டெக்னிக்கல் அதிகாரி, உதவி டெக்னிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் ஜனவரி 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  

நிறுவனம்: Unique Identification Authority of India (UIDAI)

பணி: Director - 1
பணி: Deputy Director - 2
பணி: Technical Officer - 3
பணி: Assistant Technical Officer - 8

தகுதி:  பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் தகுதியின் பிரதிநிதித்துவ அடிப்படையில் (Deputation Basis) எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் www.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

The Director(HR), Unique Identification Authority of India(UIDAI), Aadhar Complex, NTI Layout, Tata Nagar, Kodigehalli, Technology Centre, Bangalore - 560092


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 8.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com