ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் அரசு ஜீப் ஓட்டுநர் வேலை... முழு விவரம்!

மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகு, அரசுத்தலைப்பின் கீழ் பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணி
ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் அரசு ஜீப் ஓட்டுநர் வேலை... முழு விவரம்!
Published on
Updated on
1 min read


மதுரை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகு, அரசுத்தலைப்பின் கீழ் பழங்குடியினர் பிரிவில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணி சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட உள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஜீப் ஓட்டுநர் 

காலியிடங்கள்: 1

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

அனுபவம்: ஐந்தாண்டுகள் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின் படி, பழங்கியினர் 18 முதல் 37 வயதிற்குள்ளும், பழங்குடியினர்-முன்னாள் ராணுவத்தினர் 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 + இதர படிகள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(வளர்ச்சி பிரிவு), மதுரை - 20.
 
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை: 
கல்வித் தகுதி, இருப்பிடம்(குடும்ப அட்டை, ஆதார் கார்டு), சாதிச் சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 15.11.2022.

விண்ணப்பங்களை நேரிலோ அல்லது பதிவு அஞ்சம் மூலமாகவோ அனுப்பலாம்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com