உதவித்தொகையுடன் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் குழாய் அமைக்கும் பிரிவில் மாத உதவித்தொகையுடன் நிரப்பப்பட உள்ள தொழிற்பழகுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உதவித்தொகையுடன் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி: விண்ணப்பிப்பது எப்படி?



இந்தியன் ஆயில் நிறுவனத்தில் குழாய் அமைக்கும் பிரிவில் மாத உதவித்தொகையுடன் நிரப்பப்பட உள்ள தொழிற்பழகுநர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். : PL/HR/ESTB/APPR-2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 465 

பணி: தொழில்பழகுநர் பயிற்சி
1. Technician Apprentice (Mechanical/Electrical & T&I)
2. Trade Apprentice (Accountant)
பயிற்சி அளிக்கப்படும் காலம்: 12 மாதங்கள் 

3. Trade Apprentice (Assistant-Human Resource)
4. Data Entry Operator and For Domestic Data Entry Operator
பயிற்சி அளிக்கப்படும் காலங்கள்: 15 மாதங்கள்

வயதுவரம்பு: 10.11.2022 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், கம்யூனிகேசன், ரேடியோ கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.  கணக்காளர், எச்.ஆர் உதவியாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://plapps.indianoil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2022

தேர்வு நடைபெறும்  நாள்: 18.12.2022(உத்தேசயமானது) 

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com