
மத்திய தொழில் பாதுகாப்புப் படையில்(சிஐஎஸ்எப்) 787 கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சம்மந்தப்பட்ட பணி சார்புடைய தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு, சான்றிதழ்கள் சாரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியும் ஆர்வமும் உள்ளோர் நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர விவரங்கள் அறிய www.cisf.gov.in என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.