மேற்கு மத்திய ரயில்வேயில் 2521 காலிப்பணியிடங்கள்: முழு விவரம்!

மேற்கு மத்திய ரயில்வேயில் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மேற்கு மத்திய ரயில்வேயில் 2521 காலிப்பணியிடங்கள்: முழு விவரம்!


மேற்கு மத்திய ரயில்வேயில் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: மேற்கு மத்திய ரயில்வே

பணி: தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்)

காலியிடங்கள்: 2521

தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்சி, எடி மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை: மேற்கு மத்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணைதளமான https://iroams.com/RRCJabalpur/applicationAfterIndex, wcr.indianrailways.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2022 

மேலும் விவரங்கள் அறிய https://iroams.com/RRCJabalpur/pdfs/Act%20Apprrentice%20Notification%2003_2022_final.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com