20 ஆயிரம் மத்திய அரசு பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டார்களா? இன்றே கடைசி 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நாட்டில் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள தோராயமாக 20 ஆயிரம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான குரூப் 'பி' மற்றும் 'சி' எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். ஏதாவெதாரு துறையில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இளங்கலை பட்டதாரிகளுக்கான வாய்ப்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. 

அதன் விவரம் வருமாறு: 

குரூப் 'பி' பணியிடங்கள்:
பணி: Assistant Audit Officer 
பணி: Assistant Accounts Officer
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 44,900 - 1,42,400 வழங்கப்படும்.

பணி: Assistant Section Officer(Central Secretariat Service)
பணி: Assistant Section Officer(Intelligence Bureau)
பணி: Assistant Section Officer)Ministry of Railway)
பணி: Assistant Section Officer(Ministry of External Affairs)
பணி: Assistant Section Officer(AFHQ)
பணி: Assistant Section Officer(Ministry of Electronics and Information Technology)
பணி: Assistant / Assistant(Other Ministries/ Departments/ Organizations)
பணி: Section Officer
பணி: Inspector of Income Tax
பணி: Inspector, (Central Excise) 
பணி: Inspector (PreventiveOfficer)
பணி: Inspector (Examiner)
பணி: Assistant Enforcement Officer
பணி: Sub Inspector
பணி: Inspector Posts
பணி: Inspector


வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 35,400 -1,12,400 வழங்கப்படும்.

பணி: Assistant 
பணி: Divisional Accountant
பணி: Sub Inspector
பணி: Sub-Inspector/ Junior
பணி: Intelligence Officer
பணி: Junior Statistical Officer
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300 வழங்கப்படும்.

குரூப் 'சி' பணியிடங்கள்:
பணி: Auditor
பணி: Auditor
பணி: Auditor
பணி: Accountant
பணி: Accountant
பணி: Accountant/ Junior
பணி: Accountant
வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100 வழங்கப்படும்.

பணி: Postal Assistant/ Sorting Assistant
பணி: Senior Secretariat Assistant/ Upper Division Clerks
பணி: Senior Administrative Assistant
பணி: Tax Assistant
பணி: Tax Assistant
பணி: Sub-Inspector
பணி: Upper Division Clerks 

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,100 வழங்கப்படும்.

தகுதி: புள்ளியியல் மற்றும் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியான உத்தேச தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் 2022

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பட்டியல் இன, பழங்குடியின மற்றும் முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலார். 

ஆன்லைனில் விண்ணப்பிபதற்கான கடைசி நாள்: 8.10.2022

மேலும் விவரங்கள் அறிய  
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_17092022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

வழிகாட்டல்: 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது. இந்த ஆண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பாலான B பிரிவு பணிகளுக்கு பட்டப்படிப்பு முடித்த 20 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் Combined Graduate Level Examination (CGLE) போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

இவற்றில் உதவி பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்கள் ஒன்றிய அரசின் தலைமைச் செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் ஆகியவற்றிற்கும், ஆய்வாளர் பணியிடங்கள் (Inspector) ஒன்றிய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics  ஆகியவற்றிலும் மற்றும் உதவியாளர், கண்காணிப்பாளர் (Assistant Superintendent) பணியிடங்கள் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் C  பிரிவு பணிகள் 12ஆம் வகுப்பு முடித்த 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் Combined Higher Secondary Level (CHSL)  தேர்வு மூலம் ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு (Lower Division Clerks) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பாடத் திட்டங்கள்:
மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகிறது. நிலை 2-ல்    Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப் பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com