ஓமனில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?  முழு விவரம் இதோ!

ஓமனில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஓமனில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?  முழு விவரம் இதோ!

ஓமனில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமன் நாட்டில் Casting, Inspection, Mechine Operator பணிக்கு Automobile Industry 2 ஆண்டு பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும். 22 முதல் 25 வயதிற்குட்பட்டவராகவும், 60 கிலோவுக்கும் மேல் எடையுள்ளவராகவும், 165 செ.மீக்கு மேல் உயரமுள்ளவராக இருக்க வேண்டும். எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் பிட்டர், டர்னர், வெல்டர் பிரிவில் ஐடிஐ முடித்த இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.35,000 மற்றும் உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஓமனில் வேலையளிக்கப்படும் நிறுவனத்தால் வழங்கப்படும். 

ஓமன் நாட்டிற்குச் செல்வதற்கு விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் நேரிடையாகவோ அல்லது தனிநபர் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை. 

விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள https://omcmanpower.com/regformmew/itiform.php என்ற இணைப்பில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைப்பேசி எண் 044-22505886, 22502267 மற்றும் வாட்ஸ் ஆப் எண் 6379179200 எண்ணில் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். 

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின்கீழ் எந்தவொரு இடைத்தரகரோ அல்லது ஏஜண்டுகள் யாரும். எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நேரடியாக நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். 

மேலும், ஓமன் நாட்டிற்கு பணியாற்ற செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் வங்கி வரைவோலைாக கட்டினால் போதும். வேறு கட்டணங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com