விண்ணப்பித்துவிட்டீர்களா..? பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை!

சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை!


சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிசியன், கிளார்க், பொறியாளர் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி: Engineering Assistant(Trainee)
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.24,500 - 90,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician "C"
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.21,500 - 82,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

பணி: Clerk-cum-Computer Operator "C"
காலியிடங்கள்: 5
சம்பளம்: மாதம் ரூ.21,500 - 82,000
தகுதி: பி.காம், பிபிஎம் படிப்புடன் கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 1.7.2023 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு,செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை எஸ்பிஐ செல்லானை பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 8.8.2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com