தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ப்ரோபேஷனரி கிளார்க் வேலை வேண்டுமா?

TMB Bank Recruitment 2023 72 Probationary Clerk Posts
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ப்ரோபேஷனரி கிளார்க் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில்(டிஎம்பி) காலியாக உள்ள 72 ப்ரோபேஷனரி கிளார்க் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 6 -ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Probationary Clerk

காலியிடங்கள்: 72

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.8.2023 தேதியின்படி இளங்கலை பட்டதாரிகள் 24 வயதிற்குள்ளும், முதுகலை பட்டதாரிகள் 26 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி  பிசி, எம்பிசதி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.33,750 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.600 + சேவை வரிகள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் https://www.tmbnet.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 6.11.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com