ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு கருவூலங்கள் துறையில் வேலை வேண்டுமா? 

தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரியங்கள், நிறுவனங்களில் அடங்கிய 52 ஒருங்கிணைந்த கணக்குப் பதவியிடங்களுக்கான போட்டித் தோ்வு வரும் 2024-ஆம் ஆண்டு, பிப்.5, 6-ஆம் தேதி நடைபெறும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரியங்கள், நிறுவனங்களில் அடங்கிய 52 ஒருங்கிணைந்த கணக்குப் பதவியிடங்களுக்கான போட்டித் தோ்வு வரும் 2024-ஆம் ஆண்டு, பிப்.5, 6-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிக்கையில், 

தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரியங்கள், நிறுவனங்களில், 52 ஒருங்கிணைந்த கணக்குப் பதவியிடங்கள் உள்ளன. இதில், தமிழ்நாடு மாநில கரூவூலங்கள் மற்றும் கணக்கு பணிகள் பிரிவில் கணக்கு அலுவலர் நிலை-III 7, தமிழ்நாடு மருத்துவப் பணிகழத்தில் கணக்கு அலுவர் 1, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் நிலை-III(நிதி) 4, முதுநிலை அலுவலர்(நிதி) 27, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவன பிரிவில் மேலாளர்(நிதி) 13 பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு, 2024-ஆம் ஆண்டு பிப். 5, 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வுக்கு சிஏ, ஐசிடபுள்யுஏ முடித்தவா்கள் டிசம்பர் 8-ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

இந்த பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாள் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்தும் 300 மதிப்பெண்களுக்கு 200 வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவில் தமிழ் மொழித் தேர்வும், இரண்டாவது பிரிவில் 100 மதிப்பெண்களுக்கு பொது அறிவு பிரிவில் 100 வினாக்களும், கணிதப் பிரிவில் 25 வினாக்கள் இடம் பெறும்.  மொழித் தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறவில்லை என்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே என்றும் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடத்துக்கு 1.7.2023 தேதியின்படி பொதுப் பிரிவினா் 32 வயது வரையிலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில்லை.  

தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தோ்வுக் கட்டணமாக பொதுப் பிரிவினா் ரூ.200. தோ்வுக்கு விண்ணப்பிப்பவா்கள் கூடுதல் தகவல்களை, https://www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com