இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணயில் அடங்கிய மருந்து சோதனை ஆய்வகக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை(அக்.20) கடைசி நாளாகும்.
இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Published on
Updated on
1 min read


தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணயில் அடங்கிய மருந்து சோதனை ஆய்வகக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை(அக்.20) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையலாம்.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய மருந்து சோதனை ஆய்வகக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினிவழித் தேர்விற்கான இன்று வெள்ளிக்கிழமை மாலை (அக்.20) வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. 

இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் 01.07.2023 அன்றுள்ளபடி மேலும் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அநைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ஊதியமாக ரூ.36,400 - 1,15,700 வழங்கப்படும்.

மருந்தியல் அறிவியல், வேதியியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சம்மந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணமாக ரூ.100-ஐ இணையவழியில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி மற்றும் சான்றிதழ்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை www.tnpsc.gov.in இணையதள முகவரியில் ஆன்லைனில் 20.10.2023-ஆம் தேதி மாலை 5-க்குள்  விண்ணப்பிக்க வேண்டும். 

கூடுதல், விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com