இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) துணை நிறுவனமான ஐபிஆர்சியில் காலியாக உள்ள 62 தொழில்நுட்ப உதவியாளர் வேலை
இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்


தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) துணை நிறுவனமான ஐபிஆர்சியில் காலியாக உள்ள 62 தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீஷியன் ‘பி’, டிராஃப்ட்ஸ்மேன் ‘பி’, கனரக வாகன ஓட்டுநர் ‘ஏ’, இலகுரக வாகன ஓட்டுநர் ‘ஏ’, ஃபயர்மேன் -’ஏ’ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Technical Assistant (Mechanical) - 15
பணி: Technical Assistant (Electrical) - 1
பணி: Technical Assistant (Computer Science) - 1
பணி: Technical Assistant (Civil) - 3
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 142,400
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technician ‘B’ (Fitter)- 20
பணி: Technician ‘B’ (Electronic Mechanic) - 3
பணி: Technician ‘B’ (Welder) - 3
பணி: Technician ‘B’ (Refrigeration & AC)  - 1
பணி: Technician ‘B’ (Electrician) - 2
பணி: Technician ‘B’ (Plumber) - 1
பணி: Draughtsman ‘B’ (Civil) - 1
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Heavy Vehicle Driver ‘A’ - 5
பணி: Light Vehicle Driver ‘A’ - 2
வயதுவரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக, இலரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டுகள், 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Fireman ‘A’ - 1
வயதுவரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:  டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.750, இதர பணிகளுக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகள், ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iprc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.4.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com