ரூ.48,700 சம்பளத்தில் இந்து அறநிலையத் துறையில் வேலை: மிஸ்பண்ணிடாதீங்க!
By | Published On : 05th August 2023 12:36 PM | Last Updated : 05th August 2023 01:07 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் கீழே வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தினை சேர்ந்தவர்களிடம் இருந்து வரும் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: அர்ச்சகர்(உபகோயில்) - 1
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
பணி: உதவி அர்ச்சகர் - 2
சம்பளம்: மாதம் ரூ.13,200 - 41,800
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைவ ஆகமம் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: நாதஸ்வரம் - 1
சம்பளம்: மாதம் ரூ.15,300 - 48,700
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். நாதஸ்வரம் வாசிப்பில் சான்றிதழ் பயிற்சி வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
பணி: தவில் - 1
சம்பளம்: மாதம் ரூ.15,300 - 48,700
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். தாவில் வாசிப்பில் சான்றிதழ் பயிற்சி வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
பணி: மடப்பள்ளி, பரிசாரகர் - 2
சம்பளம்: மாதம் ரூ.13,200 - 41,800
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்களை பின்பற்றி பிரசாதம் மற்றும் நைவேத்தியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும். திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள் போன்ற வழக்கங்களை அறிந்திருக்க வேண்டும்.
பணி: ஒதுவார் - 1
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒதுவார் பயிற்சி வகுப்பு மூன்றாண்டு நிறைவு செய்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: பரிசாகர் - 1
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்களை பின்பற்றி பிரசாதம் மற்றும் நைவேத்தியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும். திருக்கோயில் பூஜை மற்றும் சடங்குகள் போன்ற வழக்கங்களை அறிந்திருக்க வேண்டும்.
பணி: இரவு காவலர் - 6
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி: பகல் காவலர் - 5
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 36,800
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி: திருவலகு- 4
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 31,500
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணி: மின் பணியாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900
தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட பி சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அலுவலக உதவியாளர் - 1
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 39,900
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கிகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.7.2023 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் என்கிற பெயரில் உள்ள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
செயல் அலுவலர், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 11.8.2023
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...