ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

3,049 புரொபேஷனரி அதிகாரி காலிப் பணி: ஆக.21-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய பொதுத்துறை வங்கிகளில் உள்ள புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:20 am IST


இந்திய பொதுத்துறை வங்கிகளில் உள்ள புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்(ஐபிபிஎஸ்) தெரிவித்துள்ளது.

பேங்க் ஆப் இந்தியா,  இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட இந்திய பொதுத்துறை வங்கிகளில் 3,049 புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 

தகுதி: 21.8.2023 தேதியின்படி, ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.41,960

வயதுவரம்பு: 1.8.2023 தேதியின்படி, 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.  எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.175 மட்டும் கட்டணமான செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரா்கள் https://www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆக.21-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

முதல்நிலைத் தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை,  மதுரை, கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

மேலும், இடஒதுக்கீடு மற்றும் இதர தகுதி நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களை https://www.ibps.in அல்லது இங்கே கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.