ரூ.71,900 சம்பளத்தில் சாலை ஆய்வாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரூ.71,900 சம்பளத்தில் சாலை ஆய்வாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Applications are invited from eligible candidates only through online mode upto 11.02.2023 for direct recruitment to the post of Road Inspector in Rural Development and Panchayat Raj Department includ


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மர்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு வரும் 11 ஆம் தேதிக்குள் தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் இதர விவரங்கள்:

பணி: சாலை ஆய்வாளர்

காலியிடங்கள்: 761

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி:  அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் சிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும், சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குப்படும். 

வயதுவரம்பு: 01.07.2023 தேதியின்படி கணக்கிடப்படும். ஆதிராவிடர், ஆதிதிராவிடர்(அருந்ததியர்), பட்டியலின பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்( இஸ்லாமியர், இஸ்லாமியர் அல்லாதோர்) மற்றும் அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு உச்ச வயதுவரம்பில்லை. ஏனைய வகுப்பினைச் சாராதவர்கள் முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்:  நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, எழுத்துத் தேர்வுக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். நிரந்தரப் பதிவுக் கட்டணம் ஏற்கனவே செலுத்தி ஐந்தாண்டு முடிவுறாத விண்ணப்பதாரர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில், மதுரை, உதகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மையங்களில் மட்டுமே நடைபெறும். 

விண்ணப்பிக்கும் முறை: விண் ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.2.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com