ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா? 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை வேண்டுமா? 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!


பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager
வயதுவரம்பு: 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Chief Manager
வயதுவரம்பு: 27 முதல் 38க்குள் இருக்க வேண்டும்.

பணி: Senior Manager
காலியிடங்கள்: 203
வயதுவரம்பு: 29 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840

தகுதி: CA,ICWA,CFA அல்லது நிதியியல், எச்ஆர், சந்தையியல், வங்கியியல், மேலாண்மை போன்ற பாடங்களில் எம்பிஏ அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

பணி அனுபவம்: மேலாளர் பணிக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும், இதரப் பணிகளுக்கு 5 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, இதர பிரிவினர்கள் ரூ.850 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.indianbank.in என்ற இணையதள மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.2.2023

மேலும் விவரங்கள் அறிய www.indianbank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com