
பெங்களூருவில் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Engineer -I
காலியிடங்கள்: 27 (எலக்ட்ரானிக்ஸ் - 23, மெக்கானிக்கல் - 4)
வயதுவரம்பு: 1.6.2023 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ. 55,000.
தகுதி: பொறியில் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் ஆசிரியர் வேலை: 27 இல் நேர்முகத் தேர்வு!
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager(HR/ADSN,ES&C-QA),
Bharat Electronics Ltd, Jalahalli(P.O), Bangaluru - 560 013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.7.2023