வனவிலங்கு ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
By | Published On : 29th June 2023 12:40 PM | Last Updated : 29th June 2023 12:40 PM | அ+அ அ- |

இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழுள்ள வன விலங்கு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீஷியன், டெக்னிக்கல் ஆபிசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Multi Tasking Staff
காலியிடங்கள்: 4
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Grade-III
காலியிடங்கள்: 4
தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Technician
காலியிடங்கள்: 4
வயது: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டெக்னிசியன் பிரிவில் 2 ஆண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant (Field)
காலியிடங்கள்:1
வயது: 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல், நூலக அறிவியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல், டெக்னாலஜி பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Director
காலியிடங்கள்: 1
வயது: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி:இந்தி, ஆங்கிலம் பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Technical Officer
காலியிடங்கள்:1
வயது: 40-க்குள் இருக்க வேண்டும்
தகுதி: அறிவியல், நூலக அறிவியல் பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் 11 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல், டெக்னாலஜி பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 12 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. எஸ், எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை "Director Wildlife Institute of India Dehradun." என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.wii.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar, Wildlife Institute of India, Dehradun-248 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 30.6.2023
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...