வங்கியில் வேலை வேண்டுமா? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 600 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
வங்கியில் வேலை வேண்டுமா? உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
Published on
Updated on
1 min read

இந்திய தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கடன்கள் மற்றும் இதர நிதி வசதிகளை வழங்குவதற்காக 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி(ஐடிபிஐ). இந்த வங்கி மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உருவாக்கப்பட்ட வங்கியாக இருந்தாலும், இது சாதாரண வணிக வங்கிகளைப் போலவும் செயல்படுகிறது.

தற்போது நாடுமுழுவதும் 1513 கிளைகள், துபையில் ஒரு வெளிநாட்டுக் கிளை, சிங்கப்பூர் மற்றும் பெய்ஜிங்கில் இரண்டு வெளிநாட்டு மையங்கள் உள்பட மொத்தமாக 1013 மையங்கள் மற்றும் 2713 ஏடிஎம்களுடன் உலக அளவில் 10 ஆவது இடத்தில் இருக்கும் தொழில் மேம்பாட்டு வங்கியாகும். இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட, இந்திய அரசுக்குச் சொந்தமான 26 வணிக வங்கிகளுள் இதுவும் ஒன்றாகும்.

இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள 600 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

விளம்பர எண்.02/2023-24

பணி: Assistant Manager

காலியிடங்கள்: 600

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840

வயதுவரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன், தனியார், பொதுத்துறை வங்கிகளில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் கணினி வழித்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.200. மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.idbibank.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.3.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com