ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

தர்மபுரி மாவட்ட இந்து அறநிலையத்துறை ஆணையர அலுவலகத்தில் காலியாக 7 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!


தர்மபுரி மாவட்ட இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் காலியாக 7 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து நாளைக்குள் (மார்ச் 11) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 7

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37க்குள்ளும், பிசி,எம்பிசி பிரிவினர் 34 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

விண்ணப்பிக்கும் முறை: www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 11.3.2023

மேலும் விவரங்கள் அறிய www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com