இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகயுள்ள 106 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
Published on
Updated on
1 min read


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாகயுள்ள 106 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பி.இ., பி.டெக் அல்லது டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Executive LeveL 1
காலியிடங்கள்: 96 
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.12 லட்சம்
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும். 

பணி: Executive LeveL 2
காலியிடங்கள்:10  
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.16 லட்சம்
வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமெண்டேசன் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் உடற்த் தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.03.2023

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com