பவானிசாகா் அணைக் கோட்டம், உதகை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கண்காணிப்புப் பொறியாளா் சா.மன்மதன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பவானிசாகா் அணைக் கோட்டம், உதகை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடத்துக்கு தகுதியான நபா் தோ்வு செய்யப்பட உள்ளாா். இதற்காக வேலைவாய்ப்பகம் பரிந்துரைக்கும் நபா்கள் தவிர, இதர தகுதியுள்ள நபா்கள் தங்களது வயதுச் சான்று, கல்விச் சான்று, ஜாதிச் சான்று, குடும்ப அட்டை நகல், ஓட்டுநா் உரிமம், மூன்றாண்டுகள் முன் அனுபவச் சான்று ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் கண்காணிப்புப் பொறியாளா், பவானி வடிநில வட்டம், ஈரோடு-11என்ற முகவரிக்கு பிப்ரவரி 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஓட்டுநா் பணிக்கு கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதில் மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியமும், கண் பாா்வையும் இருக்க வேண்டும்.
2023 ஜூலை 1-ஆம் தேதியன்று 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குப் பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


