குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது..? டிஎன்பிஎஸ்சி விளக்கம்


குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம் நிர்வாக அலுவலர், பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக அரசுப் பணியிடங்களுக்கான எந்த தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்து வந்தது. 

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்த குரூப் 4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்ற தேர்வை 15 லட்சம் பேர் மட்டுமே எழுதினர். தேர்வு முடிவுகள் அறிவிப்பில் குறிப்பிட்டவாறு அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்கப்பட்ட நிலையில், மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் ஜனவரியில் முடிவுகள் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியானது. 

மேலும், கடந்த 27 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்கள் எண்ணிக்கையில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்த காலியிடங்கள் 9870க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், 6 மாதங்களாக தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் தேர்வர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. 

இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.  

அதன்படி, முன்பு அறிவிக்கப்பட்ட 7,301 பணியிடங்களுக்கான குருப் 4 தேர்வு முடிவுகள் வரும் 2023 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சில நாள்களுக்கு முன்பு கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த பணியிடங்கள் 9,870 ஆக உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் 7,302 பணியிடங்களுக்கான அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் மத்தியில் ஏமாற்றம்,  குழப்பம், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com