ஸ்ரீரங்கம்: பகல் பத்து 3ம் நாள் உற்சவம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம்,  வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.  எத்தனை ஆபரணங்கள் அணிந்தாலும் அத்தனையிலும் அழகாய் காட்சியளிப்பார் நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா மூன்றாம் திருநாளான திங்கட்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

Updated on
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வெகு விமரிசையாக  மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா குறிப்பிடத்தக்கது.

பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் கொண்டாடப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் பகல்பத்து விழா சனிக்கிழமை தொடங்கியது.

பகல் பத்து உற்சவத்தின் 3 ம் திருநாளான இன்று காலை, 6:30 மணிக்கு நம்பெருமாள் நித்தியப்படி கிரீடம் புஜ கீர்த்தி, அர்த்த சந்திரன், மகாலட்சுமி பதக்கம், பெருமாள் பதக்கம், வைரஅபய ஹஸ்தம், வைர கைகாப்பு, காசு ம

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமியை பொதுவாக அலங்காரப் பிரியன் என்பார்கள்.

ஒவ்வொரு திருவிழாவுக்கும் பெருமாள் அணிந்திருக்கும் அலங்காரங்கள், ஆபரணங்கள் காணக் கண்கோடி வேண்டும்.   இத்தனை சிறப்புடைய ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டில் திருவிழா நடைபெறாத மாதங்களே இல்லை எனலாம்.

தமிழ் மாதத் தொடக்கமான சித்திரையில் தேரோட்டம், கஜேந்திர மோட்சம்,  வைகாசியில் நம்பெருமாள், தாயார் வசந்த உற்ஸவம்,

ரங்கநாச்சியார் கோடை உற்ஸவம், ஆனியில் ஆனித்திருமஞ்சனம்,  பெரியபெருமாள், ஸ்ரீரங்கநாச்சியார், சக்கரத்தாழ்வார் ஜேஷ்டாபிஷேகம்,

ஆடியில் ஆடிப்பெருக்கு, காவிரித்தாய்க்கு திருமாலை, பொட்டு அளித்தல்,

ஆவணியில் கிருஷ்ணஜெயந்தி - உறியடி உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி உற்ஸவம், ஐப்பசியில் ஊஞ்சல் உற்ஸவம், கார்த்திகையில் ஏகாதசி, நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்களைச் சாற்றுதல்,

மார்கழியில் வைகுந்த ஏகாதசி,  தையில் சங்காரந்தி, சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்தல்,

மாசியில் தெப்போத்ஸவம், பங்குனியில் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை, ஆதி பிரம்மோத்ஸவம் என 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும் புண்ணியத்தலமாக ஸ்ரீரங்கம் கோயில் திகழ்கிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து உற்ஸவத்துக்கென சில நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளின்படி திருவிழா நடைபெற்று வருகிறது.

பெரிய திருக்கோயில் எனப்படும் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நடைபெறும் எந்த திருவிழாக இருந்தாலும் திருக்கோயில் நிர்வாகத்தால் குறிப்பிடப்படும் நேரத்தில் சுவாமி புறப்பாடு தொடங்கும்.

யாருக்காகவும் பெருமாள் காத்திருக்க மாட்டார்கள் என்பார்கள்.   உடையவர் எனப்படும் ராமானுஜர் காலத்தில் வகுத்த நிர்வாக முறை இன்றளவும் இக்கோயிலில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவிழாக்களில்
யாருக்காகவும் பெருமாள் காத்திருக்க மாட்டார்கள் என்பார்கள்.   உடையவர் எனப்படும் ராமானுஜர் காலத்தில் வகுத்த நிர்வாக முறை இன்றளவும் இக்கோயிலில் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருவிழாக்களில்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா மூன்றாம் திருநாளான திங்கட்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா மூன்றாம் திருநாளான திங்கட்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com