பீகிங், ஜூலை 31 - முன்பு ஏற்பட்ட பூகம்பத்தைப் போன்ற அளவு கடுமையான மற்றெரு பூகம்பம் இன்றோ அல்லது நாளையோ ஏற்படக் கூடும் என்று சீன அதிகார வட்டாரங்கள் இன்று மீண்டும் எச்சரித்துள்ளன.
பீகிங்கிற்கு கிழக்கே 150 கிலோ மீட்டர் (94 மைல்) தூரத்தில் உள்ள டாங்ஷான் என்ற நிலக்கரிச் சுரங்க நகரின் பக்கத்தில் உள்ள ஓர் இடத்தை மையமாகக் கொண்டு பழைய பூகம்பம் ஏற்பட்டது. அந்தப் பூகம்பத்தின் காரணமாக அந்தப் நகரமே அழிந்து போய் விட்டது என்பது வாசகர்கள் அறிந்ததே. கிட்டத்தட்ட அதே இடத்தை மையமாகக் கொண்டு தான் புதிய பூகம்பமும் ஏற்படும் என்று சீன நில நடுக்க சாஸ்திர விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
"இன்றோ அல்லது நாளையோ மறுபடியும் பழைய அளவு பெரிய பூகம்பம் ஏற்படப் போகிறது. ஆகையால், நீங்கள் உஷாராக இருந்து உங்கள் பந்தோபஸ்து பற்றி முழுக்கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று சீன அரசாங்கத் தகவல் இலாகா வெளிநாட்டு நிருபர்களிடம் கூறியது.
நேற்றுக் காலையில் கூட அவர்கள் இது போன்ற எச்சரிக்கையைக் கூறினார்கள் என்றாலும் அந்த எச்சரிக்கை இன்று கூறிய அளவு திட்டவட்டமாகவும், உறுதியாகவும் இல்லை.
கடந்த பூகம்பத்தின் காரணமாக மின்சார, தண்ணீர், காஸ் சப்ளை பாதிக்கப்படவில்லை. தந்தி, பஸ் போக்குவரத்துக்களும் நடக்கின்றன. உணவு, காய்கறி, மற்றும் அன்றாடத் தேவைப் பொருள்கள் ஆகியவைகளின் சப்ளை பாதிக்கப்படாது நடந்து வருகிறது.
10 லட்சம் பேர் சாவு
சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் 10 லட்சம் மக்கள் மாண்டதாக அமெரிக்க உளவு வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் உயிர்ச் சேதம் பற்றிச் சீனாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக திட்டவட்டமான தகவல் வெளி உலகிற்கு ஒரு போதும் கிடைக்க வழியில்லை என்று தெரிகிறது. ஏனெனில், இப்படிப்பட்ட தகவல்களை சீனா வெளி உலகிற்கு வெளியிடுவது வழக்கமில்லை. டாங்ஷானின் ஜனத் தொகை 16 லட்சம்.
சீனாவில் அதிகம் 'கோக்' நிலக்கரி உற்பத்தி செய்வது டாங்ஷான் நகர் பகுதியே. அது பூகம்பத்தின் காரணமாகத் தரைமட்டமாகி விட்டதால், சீனாவின் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். டாங்ஷான் சுரங்கங்களில் மொத்தம் 250 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தியாகிறது. ஆகவே முக்கியமாக உருக்குத் தொழிலை இது பாதிக்கும். ...
மேட்டூர் நீர் தேக்க நிலை பற்றி கவலை - நீர் வரத்து இதுவரையில்லா அளவுக்கு குறைந்துவிட்டது
சென்னை, ஜூலை, 31- மேட்டூர் நீர்த்தேக்கத்துக்கு கிருஷ்ணராஜ சாகரிலிருந்து நீர்வரத்து சமீப காலத்தில் என்று மில்லாத அளவுக்கு மிக மிகக் குறைந்துவிட்டது. சனிக்கிழமை காலை வினாடிக்கு 165 கன அடி தண்ணீரே வந்தது. மேட்டூருக்கு இவ்வளவு குறைவாக தண்ணீர் வரத்து இதுவரை இருந்ததில்லை. தேக்கத்தின் நீர் மட்டமும் சனிக்கிழமையன்று 54 43 அடியாகக் குறைந்தது.
கிருஷ்ணராஜ சாகர் நீர்த் தேக்கத்தில் சனிக்கிழமை நீர் மட்ட அளவு 96.86 அடி ஆகும். இந்த நீர்த் தேக்கத்திற்குத் தண்ணீர் வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடி; வெளியேறும் நீர் அளவு வினாடிக்கு ஆயிரத்து 240 கன அடிதான். கடந்த ஆண்டு இதே தேதியில் கிருஷ்ணராஜ சாகர் நீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 44 ஆயிரம் கன அடியாகவும், மேட்டூர் நீர்த்தேக்கத்திற்கு வரத்து வினாடிக்கு 51 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.
கிருஷ்ணராஜசாகர் அணைக் கட்டிற்கு இன்றைய நீர் வரத்து அடிப்படையில் மேட்டூருக்குத் தண்ணீர் விட்டாலும் குறைந்த பட்சம் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீராவது வந்து சேர வேண்டும். ஆனால் மேட்டூர் நீர்த் தேக்கத்திற்கு சனிக்கிழமை வந்த நீர் வரத்தோ வினாடிக்கு 165 கன அடிதான். வரலாறு காணாத வகையில் இவ்வளவு குறைவாக மேட்டூருக்கு நீர் வரத்து குறைந்துள்ளது குறித்து மாநில பாசனத் துறையினர் கவலை கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், மேட்டூருக்கு வழக்கமான அளவுக்குத் தண்ணீர் விடுவதற்காக கர்நாடக மாநில அரசுடன் தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. ...
Summary
August 1, 1976: 1 million people died in the Chinese earthquake.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு மீறல்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காத கர்நாடகம்!

தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டபோதிலும் எங்களிடம் தண்ணீர் இல்லை: கர்நாடக அமைச்சர்

காவிரி டெல்டா விவசாயிகளை காக்க சிறப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும்: அன்புமணி
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!




