இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

14.11.1976: மின்சார வெட்டு இப்போது தளராது என்கிறார் கவர்னர்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

14.11.1976 - Dinamani

Updated On :

சென்னை, நவ. 13 - தமிழ்நாட்டில் இப்போது அமலில் உள்ள மின்சார வெட்டை உடனடியாக ரத்து செய்யும் எண்ணம் அரசுக்கு இப்போது இல்லை; அதற்கான சாத்யக்கூறும் இல்லை என்று தமிழ்நாடு கவர்னர் மோகன்லால் சுகாதியா இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறினார்.

மின்சார நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவசரப்பட்ட முடிவு எதையும் எடுக்க அரசு விரும்பவில்லை. பிரச்னையின் அனைத்து அம்சங்களையும் டிசம்பர் மாத வாக்கில் முழுமையாக அரசு ஆராயும். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு நிருபரின் கேள்விக்கு கவர்னரின் ஆலோசகர் ஆர்.வி. சுப்ரமணியம் பதிலளிக்கையில் "வீட்டு தேவைகளுக்காக நிர்ணயிக்கப்பட்ட மின் உபயோக உச்ச அளவைத் தளர்த்தும் யோசனை ஏதும் பரிசீலனையில் இல்லை. மின் உபயோகத்தை சிக்கனப்படுத்த வேண்டிய நேரமிது. மின் வெட்டை தளர்த்துவது இப்போது உசித மல்ல" என்று பதில் கூறினார்.

கேரளாவிலிருந்து தினமும் முப்பது லட்சம் யூனிட் வீதம் மின்விசை பெற்று வருகிறோம். இதில் பத்து லட்சம் யூனிட்டுகளை கர்தாடக மாநிலத்திற்கு கொடுத்து உதவுகிறோம் என்றும் கவர்னர் கூறினார். ...

இன்று முதல் கீழ்க் கோர்ட்டுகளில் தமிழில் தீர்ப்புகள்

சென்ளை, நவ. 13- சபார்டினேட் சிவில், கிரிமினல் கோர்ட்டுகளனைத்திலும் நாளையிலிருந்து தீர்ப்புகள், உத்தரவுகளனைத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்று தமிழக சர்க்கார் அறிவித்திருக்கிகிறது.

தமிழ்நாடு ஆட்சி மொழி(திருத்த)ச் சட்டத்தை ராஷ்டிரபதி நேற்று இயற்றியதைத் தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைகோர்ட்டுக்கு கீழ் உள்ள (சபார்டினேட்) சிவில், கிரிமினல் கோர்ட்டுகளனைத்தின் மொழி தமிழ் என்று இச்சட்டம் அறிவிக்கிறது. டிரிபியூனல்கள், வாடகை விவகார கோர்ட்டுகள், ரெவின்யூ கோர்ட்டுகள் ஆகியவையும் தமிழில் சாட்சியங்களைப் பதிவு செய்யும்; தமிழில் தீர்ப்புகளை எழுதும்; தமிழில் டிகிரிகளை, உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.

இன்று வெளியான விசேஷ கெஜட் அறிவிப்பின்படி துல்லியமான பொருளையும், நோக்கத்தையும் கொண்டுவரும் பொருட்டு அவசியப்படும்போது ஹைகோர்ட்டுக்குக் கீழேயுள்ள சிவில் கிரிமினல் கோர்ட்கள், டிரிபியூனல்கள் ஆகியவை ஆங்கிலத்திலேயே தீர்ப்பை அளிக்கவும், உத்தரவு பிறப்பிக்கவும், விஷயங்களைப் பதிவு செய்யவும் அவற்றுக்கு விலக்கு அளிக்க ஹைகோர்ட்டுக்கு இச்சட்டம் அதிகாரமளிக்கிறது.

வாடகை விவகார கோர்ட்டுகள், ரெவினியூ கோர்ட் சம்பந்தப்பட்டவரை இத்தகைய விலக்கு அளிக்க ரெவினியூ போர்டுக்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் இத்தகைய விதி விலக்கு குறிப்பிட்ட காரணங்களுக்காக, குறிப்பிட்ட காலத்துக்கு அளிக்கப்படும். இதனை ஹைகோர்ட் அல்லது ரெவினியூ போர்டு முடிவு செய்யும் என்று கெஜட் அறிவித்தது.

ஹைகோர்ட்டுக்குக் கீழேயுள்ள சிவில், கிரிமினல் கோர்ட்டுகள் டிரிபியூனல்கள், வாடகை, ரெவினியூ கோர்ட்கள் ஆகியவை சம்பந்தமாக இச்சட்டத்தின் ஷரத்துக்கள் எந்தத் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்பதை மாநில சர்க்கார் அறிவிக்கும் என கெஜட் குறிப்பிட்டது.

இத்திட்டத்தை நாளை ராஜாஜி ஹாலில் மத்திய நிதி மந்திரி சி. சுப்பிரமணியம் துவக்கி வைப்பார். கவர்னர் சுகாதியா தலைமை வகிப்பார். மூன்று சட்டங்களின் மொழி பெயர்ப்புப் பிரதிகளை சுப்ரமணியம் வெளியிடுவார்.

Summary

14.11.1976: Power cuts will not be relaxed for now, says the Governor

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.