17.11.1976: இந்த ஆண்டு பணவீக்கம் மீண்டும் தோன்றக்கூடும் - ரிசர்வ் வங்கி துணை தலைவர் எச்சரிக்கை
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

17.11.1976 - Dinamani
புனா, நவ.15 - இந்த ஆண்டில் மீண்டும் பணவிக்கம் தோன்றக்கூடும் என்று தேசத்தை இன்று ரிசர்வ் பாங்கு டெபுடி கவர்னர் டாக்டர் ஆர். கே. ஹஸாரி எச்சரித்தார்.
இங்கு பிராத்திய கிராம பாங்குகளின் அதிகாரிகளுக்கு முதல் பயிற்சி திட்டத்தை அவர் துவக்கி வைத்தார். இந்த ஆண்டு மார்ச்சுக்கு பின் பணசப்ளை 1.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது; மொத்த விலைக் குறியீட்டெண் 11 சதவிகிதம் உயர்த்துள்ளது என்று அவர் சொன்னார்.
இந்தப் போக்குகள் சாதகமாக இல்லை என்று நிதி மந்திரியும், ரிசர்வ் பாங்கு கவர்னரும் ஒளிவு மறைவின்றி கூறியிருக்கிறார்கள். பணவீக்கப் போக்கை வெற்றி கண்டு விட்டோம் என்ற எந்த நம்பிக்கையும் பக்குவமற்ற எண்ணமாகும் என்றார் அவர்.
மத்திய அல்லது மாநிலங்களின் பற்றக்குறை பட்ஜெட்டுகளால் பணவீக்கப் போக்கு ஏற்படவில்லை என்று நிருபர்களிடம் அவர் சொன்னார். இந்தப் பற்றாக்குறைகள் சொற்பமானவை என்றார்.
பணவீக்கப் போக்கை எதிர்த்துப் போராட ஒரு வழி, அந்நியச் செலாவணி இருப்பை உற்பத்தி முக முதலீடு செய்வதாகும் என்று அவர் கூறினார். இயந்திரங்கள் மற்றும் நாட்டுக்குத் தேவையான அரிய பொருட்களை இறக்குமதி செய்யவும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
பாங்கு கடன் வசதி அதிகரித்ததும் பணவீக்கப் போக்குக்கு காரணமாகும் என்று அவர் சொன்னார்.
த.நா.வில் மின்சார வெட்டு உயராது - கவர்னரின் ஆலோசகர் ஆர்.வி.எஸ். அறிவிப்பு
திருச்சி, நவ. 16 - தமிழ்நாட்டில் தற்பொழுது அமலில் உள்ள மின்சார வெட்டு அளவை உயர்த்தும் உத்தேசமில்லை என்று கவர்னரின் ஆலோசகர் ஆர்.வி. சுப்ரமணியம் இன்று அறிவித்தார்.
தூத்துக்குடி அனல் மின்சார திட்டத்தின் இரண்டாவது யூனிட்டை மூன்று மாதங்கள் முன்னதாக நிர்மாணிக்கும் பிரச்னை குறித்து மத்ய மின்சார ஆணைக்குழுவுடன் தமிழக சர்க்கார் தொடர்புகொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சேலம் உருக்கு ஆலை திட்டபணியை துரிதப்படுத்துவதைப் பற்றியும் நெய்வேலியில் இரண்டாவது சுரங்கவெட்டு ஏற்படுவது பற்றியும் மத்ய சர்க்காருடன் மாநில அரசு விவாதித்து வருகிறது எனவும் சுப்ரமணியன் குறிப்பிட்டார்.
திருச்சியிலிருந்து சுமார் 70 கி. மீ.தொலைவில் உள்ள கரூரில் பிரயாணிகள் தங்கும் விடுதியில் அவர் நிருபர்களிடம் இவ்விவரங்களைத் தெரிவித்தார். மின்சார வெட்டு அளவை அதிகரிக்காமலிருக்கும் பொருட்டு, தற்போதுள்ள மின்சார வளத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தி வருவதாக ஆலோசகர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் உள்ள அனல் மின்சார நிலையங்களில் அதிகபட்சமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், நெய்வேலி மிகச் சிறந்த முறையில் செயல்படுவதாகவும் அவர் தெரிவித் தார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த மழையினால் ஜல சக்தி மின்சார நிலையங்களின் நிலைமை விருத்தியடையவில்லை. தமிழ்நாட்டின் மின்சார நிலவரம் முழுவதும் டிச. 15-ல் அதாவது வடகிழக்குப் பருவமழைக்குப் பின்னர் பரிசீலிக்கப்படும். அது சமயம் ஏதாவது நிவாரணம் அளிப்பது சாத்யம் என்று சர்க்கார் நம்புகிறது என்று சுப்ரமணியன் மேலும் கூறினார். ...
Summary
17.11.1976: Inflation may re-emerge this year – Reserve Bank Deputy Governor’s warning
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


