குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

19.11.1976: ஆந்திராவில் 3 ரயில்கள் மோதல்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

19.11.1976 - Dinamani

Updated On :

விஜயவாடா, நவ. 18 - ஒரு பிரயாணி ரயில் உட்பட மூன்று ரயில்கள் நேற்றிரவு மோதிக்கொண்டதன் விளைவாக 9 நபர்கள் இறந்தனர். 21 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேருக்கு பலத்த காயம். தென்மத்திய ரயில்வேயின் விஜயவாடா - கூடூர் பிரிவில் பிட்ரகுண்டா அருகே இவ்விபத்து நிகழ்ந்தது.

கவாலிக்கும் ஸ்ரீவெங்கடேசுவர பாலத்துக்கு மிடையே நேற்றிரவு சுமார் 9-15க்கு விபத்து நிகழ்ந்ததாகவும், அது சமயம் புயலின் விளைவாக செய்திபோக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் இங்குள்ள டிவிஷனல் ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

சென்னை - விஜயவாடா பிரயாணி ரயில் விபத்துக்குள்ளாகிய பிரயாணி ரயிலாகும். மற்ற இரண்டும் கூட்ஸ் ரயில்களாகும்.

பிரயாணி ரயிலின் எஞ்சினும், ஒரு பெட்டியும், கூட்ஸ் ஸ்பெஷல் ரயிலின் 4 திறந்த வாகன்களும் மூடப்பட்ட வாகன் ஒன்றும், பிரேக் வேனும், இரண்டாவது கூட்ஸ் ரயிலின் டீஸல் எஞ்சினும், மூன்று வேகன்களும் அவை மோதிய வேகத்தில் தடம் புரண்டன.

இறந்தவர்களில் ஒருவர் பிரயாணி, மற்ற 8 பேரும் ரயில்வே சிப்பந்திகள். டாக்டர்களும், நர்ஸுகளும் கொண்ட மருத்துவ நிவாரண வேன்கள் பிட்ரகுண்டாலிலிருந்தும் விஜயவாடாவிலிருந்தும் அனுப்பப்பட்டன. ...

தமிழக ஆலயங்களில் அறங்காவலர் குழு அமைப்புப் பணி இந்த மாதம் துவங்கும்

சென்னை, நவ: 18- தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில்கள் ஏறத்தாழ 120-ல் அறங்காவலர்களையும், அறங்காவலர் குழுக்களையும் அமைக்க ஏற்பாடு அரசு செய்து வருகிறது. இம்மாதக் கடைசிக்குள் இந்த பணியைத் துவக்கிப் படிப்படியாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மொத்தம் இருபது ஆயிரத்துக்குச் சற்று கூடுதலான கோவில்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1500 கோவில்கள் நல்ல வருமானம் வரக்கூடிய பெரிய கோவில்களாகும். இந்த 1500 கோவில்களும் தற்போது நிர்வாக அதிகாரிகளின் நேரடி நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

கடந்த ஜூன் மாதம் அமலுக்கு வந்த ராஷ்டிரபதி சட்டத்தின் அடிப்படையில், மாதிலத்தில் உள்ள கோவில்களில் பரம்பரை அல்லாத தர்மகர்த்தாக்கள் பதவி விலக்கப்பட்டு அறங்காவலர் குழுக்களும் கலைக்கப்பட்டு, ஆலயங்கள் நிர்வாக அதிகாரிகளின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்த அடிப்படையில் 1500 ஆலயங்களுக்கு நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அறங்காவலர் குழுக்களின் பணிகளை நிறைவேற்றி வருகிறார்கள். ...

Summary

19.11.1976: Collision of 3 trains in Andhra Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.