20.11.1976: தஞ்சை மாவட்டம் முழுவதிலும் கன மழை - வங்கக் கடலில் காற்றழுத்த மண்டலம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

20.11.1976 - Dinamani
சென்னை, நவ.19 - ஸ்ரீலங்கா - தமிழ்நாடு கரைக்கு அப்பால் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளதன் விளைவாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு பூராவிலும் பரவலாகவும், கரையோரப் பகுதிகளின் இங்குமங்குமாகப் பலத்த அளவிலும் மழை பெய்யலாம் என்று சென்னையில் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று காலையில் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. பெய்துள்ள மழை அளவு: சென்டிமீட்டர், மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் - தலா 9 சென்டி மீட்டர், காரைக்கால் 7 சென்டி மீட்டர், மன்னார்குடி, மணப்பாறை - தலா 6 சென்டி மீட்டர், கோவை, ஸ்ரீவில்லிபுத்தூர், குன்னூர் - தலா 5 சென்டிமீட்டர்.
தஞ்சை மாவட்டத்தில்
தஞ்சை மாவட்டம் முழுவதிலும் நேற்றிலிருந்து பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.
8000 ஹெக்டேர் நிலத்தில் (சுமார் 17,000 ஏக்கர் சம்பா, குறுவை, நெல் பயிர்கள் தண்ணீரில் அமிழ்ந்திருக்கின்றன.
தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்: தஞ்சை 109 மி. மீட்டர்; பாபநாசம் 85 மி.மீ.; கீழ் அணைக்கட்டு 97 மி.மீ.; மாயவரம் 47 மி.மீ.; நாகப்பட்டினம் 77 மி.மீ.; திருத்துறைப்பூண்டி 126 மி.மீ. மதுக்கூர் 81.2 மி.மீ.
சென்னை நகரில் இன்று முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. மாலை 4 மணி வரை 12 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. ...
பிரதமர் 59-வது பிறந்த தினம்: வடகிழக்கு எல்லை மலை வாழ் பழங்குடி மக்களிடையே கழித்தார்
கோன்ஸா (அருணாசலப்பிரதேசம்), நவ. 19- பிரதமர் இந்திரா காந்தி இன்று தமது 59-வது பிறந்த தினத்தை இந்தியாவின் வடகிழக்குக் கோடியில் அருணசலப் பிரதேசத்தில் மலைவாழ் பழங்குடி மக்களுடன் கழித்தார்.
கோன்ஸா பள்ளத்தாக்கில் வாங்சோ, நோக்டே, டாங்சா, சிங்போ பழங்குடி மக்களிடையே பிரதமர் அரை நாள் இருந்தார். "ராங்கோங் ஹம்" என்ற பெயர் கொண்ட நோக்டே பழங்குடி மக்களின் ஆன்மிக, கலாசார நிலையத்தின் உரிமையை அவர் ஒப்படைத்தார். ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பிரார்த்தனைக் கூடத்தில் அவர் பிரார்த்தனை செய்தார். வாங்சோ பழங்குடி மக்களின் நடனங்களையும், இசையையும் அவர் கண்டு களித்தார். பழங்குடி மக்களின் தலைவர்கள், பிரதமரைச் சந்தித்து பிறந்த தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.
பிரதமர் இந்திரா காந்தி இங்கு இன்று காலையில் ஒரு ஹெலிகாப்டர் மூலம் வந்து சேர்ந்தார். அருணசலப் பிரதேச முதலமைச்சர் பிரேம் கண்டு தங்கோன், உள்துறை துணை மந்திரி ஓம் மேத்தா ஆகியோர் அவருடன் வந்தார்கள். ...
Summary
20.11.1976: Heavy rainfall across Thanjavur district – a low-pressure system in the Bay of Bengal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


