தஞ்சை பெரிய கோயில் படத்துடன் புதிய ரூ. 1,000 பணத்தாள் வெளியீடா? மத்திய அரசு விளக்கம்
தஞ்சை பெரிய கோயில் படத்துடன் மஞ்சள் நிறத்தில் ரூ. 1,000 பணத்தாள் குறித்து வெளியான தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கம்...

தஞ்சை பெரிய கோயில் படத்துடன் புதிய ரூ. 1,000 பணத்தாள். - படம்: எக்ஸ்.
தஞ்சை பெரிய கோயில் படத்துடன் மஞ்சள் நிறத்திலான புதிய ரூ. 1,000 பணத்தாள்கள் வெளியானதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தியாவில் கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில் புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1,000 பணத்தாள்களை கடந்த 2016 ஆம் ஆண்டு நவ. 8 ஆம் தேதி முதல் செல்லாது என்று பிரதமர் அறிவித்தார். அதன்படி, செல்லாத ரூ. 500, ரூ. 1,000 தாள்களை மத்திய ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுக் கொண்டது.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 பணத் தாள்களுக்குப் பதிலாக புதிய தில்லி செங்கோட்டை படத்துடன் ரூ. 500 மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் மங்கல்யான் படத்துடன் புதிய ரூ. 2,000 பணத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதன்பின், 2023 ஆம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் நோட்டை மத்திய அரசு புழக்கத்தில் இருந்து திரும்ப பெற்றது. தற்போது ரூ.10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 200, ரூ. 500 பணத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களாக தஞ்சை பெரிய கோயில் கோபுரம் படத்துடன் மஞ்சள் நிறத்தில் ரூ. 1000 பணத்தாளின் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், வருகிற நவ. 15 ஆம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரபூர்வமாக வெளியிடும் என்றும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில், புதிய ஆயிரம் ரூபாய் தொடர்பான அறிவிப்புகள் உண்மையில்லை என்றும் ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அதிகாரப்பூர்வமான முறையில் தகவலை உறுதி செய்ய வேண்டும். உறுதி செய்யப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ð¨ FAKE â¹1,000 NOTE ALERT!
— PIB Fact Check (@PIBFactCheck) October 27, 2026
Several social media posts claim that a new â¹1,000 note has been issued.#PIBFactCheck
â This claim is fake.
â The @RBI has made no announcement regarding the issuance of a new â¹1,000 note.
ð¸ Verify information through official sources and do⦠pic.twitter.com/Mf9giXrLva
Summary
Images and videos showing a yellow-hued Rs 1,000 currency note featuring a temple motif have circulated on social media, with claims that the note has either been newly issued or will enter circulation on the 15th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

