கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

28.11.1976: வகுப்புவாத, பிராந்திய கட்சிகள் குறித்து நீடித்த உஷார் மிகவும் தேவை - இந்திரா காந்தி

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

28.11.1976 - Dinamani

Updated On :

புது டில்லி, நவ. 27 - வகுப்புவாத, பிராந்தியக் கட்சிகள் குறித்து தொடர்ந்து மிகவும் உஷாராக இருந்து வருவதன் அவசியத்தை பிரதம மந்திரி இந்திரா காந்தி இன்று வலியுறுத்தினார். இத்தகைய கட்சிகள் இன்னமும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அபாயத்தை விளைவிக்கக் கூடியவையாக உள்ளன என்று அவர் கூறினார்

தேசிய ஒருமைப்பாடு பற்றிய செயற்குழு ஒன்றின் கூட்டத்தை துவக்கி வைத்து பிரதம மந்திரி பேசினார். சமீபத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும் சில வகுப்புவாத கட்சிகள் தங்களது ரகசிய நடவடிக்கைகளை நீடித்து வருகின்றன. சூரிய வெளிச்சத்தையும், திறந்த வெளியையும் காண கூச்சம் காரணமாக அக்கட்சிகள் "இருளடைந்த இதயங்களை" கொண்டுள்ளன போலும் என்று இந்திரா காந்தி குறிப்பிட்டார்.

அநேக பிராந்திய கட்சிகள் இன்னமும் மாகாணப் பித்தை போதித்து வருகின்றன. இக்கட்சிகளில் சில பிரிவினையை முழு அளவில் கைவிடவில்லை. இவை இன்னமும் "பிரிவினை மொழியை" பகிரங்கமாக இல்லாவிட்டாலும் தனிப்பட்ட கூட்டங்களிலும் சம்பாஷணைகளிலும் பயன்படுத்தி வருகின்றன என பிரதம மந்திரி கூறினார். ...

வியாசர்பாடியின் எல்லா பக்கங்களிலும் இன்னும் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது

சென்னை, நவ: 27 - சென்னையில் வியாசர்பாடி பகுதியின் நான்கு பக்கங்களும் நான்கு அடி முதல் ஐந்து அடி வரை ஆழமுள்ள தண்ணீரால் இன்னமும் சூழப்பட்டுள்ளன என்று அப்பகுதி வாழ் மக்கள் கூறும் செய்திகளிலிருந்து தெரிகிறது.

மாநகராட்சி வட்டங்கள் 41, 42, 46 ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள். நெல்லூர் டிரங்க் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை) வெள்ளம் புகுந்துள்ளது.

சுமார் 15,000 முதல் 20,000 வரையில் குடிசைகள் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. 50000 குடிசை வாசிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மக்கள் புகார்

இதுவரையில் அதிகாரிகளிடமிருந்து தங்களுக்கு எந்தவித உதவியும் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறினார்கள். அங்குள்ள மார்வாரி சங்கம் உணவுப் பொட்டலங்களை வினியோகித்து மக்களுக்கு உதவியது.

ஹாலந்து கிறிஸ்தவர் மிஷன் குடிசைவாசிகளுக்கு பிஸ்கட் பொட்டலங்களை வழங்கியது.

குடிசைவாசிகள் கடும் பாதிப்பு

வியாசர்பாடி பாகுதியில் உள்ள பக்தவத்சலம் நகர், சத்தியவாணி முத்து நகர், பெரியார் நகர், ஜெகஜீவன்ராம் நகர் ஆகியவை நீரால் சூழப்பட்டுள்ளன. அங்குள்ள குடிசைவாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அருகாமையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளிலும், அரசினர் கல்லூரியிலும் அவர்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான ஐந்து அல்லது ஆறு குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ...

Summary

Constant vigilance regarding communal and regional parties is highly necessary — Indira Gandhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.